ஹெரோயின் கடத்தல் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிட வந்த தாயார், இரகசியமாக பீடி வழங்கியுள்ளார்.
பீடியை சிறைச்சாலைக்குள் கடத்தி வந்தபோது, சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் சிக்கியதை தொடர்ந்து, இரண்டு கைதிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
பீடி கடத்தியவரும், பீடி கடத்தப்படுவதை தெரிந்திருந்தும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் தகவலளிக்காத மற்றொரு கைதியுமே தாக்கப்பட்டனர்.
நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாம் தாக்கப்பட்டதாக அவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களை சட்டவைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.
கொக்குவில் மேற்கு பகுதியை ஒருவரும், ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த ஒருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.