முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்ற யாழ் இளைஞன் மரணம்.

 முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று (28-04-24) மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள்.

இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.

நாயாறு கடற் படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞன் நாயாறு கடலில் மூழ்கிய நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்கப்படவில்லை குறித்த நீரில் மூழ்கியவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளனர். தந்தை மற்றும் மகன், மூன்று சகோதரர்கள் ஒன்றாக உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

குறித்த பகுதி நீராடுவதற்கு ஆபத்தான பகுதி என அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இதனை விட பிரதேச வாசிகளும் வருபவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் அது செவிமடுக்கப்படாமல் தொடர்ந்து உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் பாலசுந்தரம் பிரதீபன் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நபர் திருகோணமலை சேர்ந்தவர் இவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad