கிராமம் என்றால் எப்படியிருக்கும் என்ற ஒரு அமைப்பு நமக்குத் தெரியும். ஆனால், சீனாவில் Guizhou என்ற மாகாணத்தில் உள்ள ஜாங்டாங் என்ற பகுதியில் அமைந்துள்ள பெரிய மலையின் குகையில் ஒரு சிறிய கிராமம் உள்ளது.
சீனாவின் குகை கிராமம் என அழைக்கப்படும் இந்தக் கிராமத்தில் மொத்தம் 18 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்தக் கிராமமானது கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில்
இருப்பதனால் இங்கு வாழும் மக்கள் வெளி உலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்தக் கிராமத்திலுள்ள பிள்ளைகளுக்காக அங்கேயே பள்ளிகள் செயல்பட்டு வந்தது. ஆனால் சீனா அரசு குகைக்குள் மக்கள் வாழ்வதற்கு தடை விதித்ததால் 2008ஆம் ஆண்டு அந்த பள்ளியை மூடியது.
இதனால் தற்போது 2 மணி நேரம் பயணித்து அருகிலுள்ள கிராமத்திலுள்ள பள்ளியில் கல்வி கற்கின்றனர்.
1949ஆம் ஆண்டு, சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரினால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மலைப்பகுதியில் இருக்கும் மக்கள் இந்த குகையில் வந்து குடியேறினர். அதிலிருந்து இவர்கள் தங்களுக்கான வீடு, விவசாயம் போன்றவற்றை அங்கேயே உருவாக்கிக்கொண்டனர்.
இந்த குகையை விட்டு வெளியேறும்படி சீனா அரசு கூறினாலும் இந்த மக்கள் போகமாட்டோம் என பிடிவாதமாக இருக்கின்றனராம்.
கடும் குளிர், வெப்பத்துக்கு மத்தியிலும் இங்கு வாழ்வது இந்த மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறுகின்றனர்.