நாளை கனடா செல்லவிருந்த யாழ் இளைஞன் விபத்தில் பலி.

கனடாவுக்கு பயணமாகயிருந்தநிலையில்
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்தபி – பனுஜன் வயது 22 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த இளைஞர் நாளைய தினம் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad