யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் விபத்தில் சிக்கிய 17 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
நேற்று (18) செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நீர்வேலி, வில்லுமதவடிக்கு அண்மையான பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது.
கைதடிப் பகுதியில் மின்னொளியில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கலைப்பிரியன் (17) என்பவரே உயிரிழந்துள்ளார் . இதே வேளை குறித்த சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடாத்தி சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்ய வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.