பெற்றோர் உயிரிழந்த நிலையில் மகளும் நேற்றைய தினம் உயிரிழப்பு ; நயினாதீவில் சோகம் !

 தந்தை தாய் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த இளம் பெண் நேற்றைய தினம் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நயினாதீவு 05 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசசூரியர் பவதாரணி வயது 22 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad