பல்லாயிரக்கணக்கான சர்வதேச பயணிகளை பாதிக்கும் விதமாக கனடா அரசு புதிய கட்டுப்பாடுகளை விசா கொள்கையில் கொண்டுவந்துள்ளது. வழக்கமாக 10 வருட பல நுழைவு விசாக்களை வழங்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. IRCC மூலம் வியாழன் அன்று அறிவிக்கப்பட்டது.
அதில் முக்கியமாக இத்தனை காலமாக வழங்கப்பட்டு வந்த 10 வருட விசிட் விசா நடைமுறையானது இனிமேல் வழங்கப்படாது, பதிலாக புதிய கட்டுப்பாடுகளுடன் விசிட் விசா வழங்கும் நடைமுறை (ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் சென்கென் விசா நடைமுறையினை போல்) இனி வரும் காலங்களில் கனடாவில் பின்பற்றப்படும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது .
அதாவது விசிட் விசா விண்ணப்பிப்பவர்கள் அவர்களின் விண்ணப்பிப்பதின் நோக்கம், நிதி நிலைமை, மருத்துவ நிலைமை மற்றும் அவர்கள் நாட்டுடன் கனடா அரசு கொண்டுள்ள உறவின் தண்மை என்பவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் விசாவின் கால எல்லை தீர்மானிக்கப்படுவதுடன் வழங்கப்படும் விசாக்கள் ஒற்றை நுழைவு விசா(single entry) அல்லது பல நுழைவு விசா(multiple entry) என்பதும் தீர்மானிக்கப்படும்.
இந்த மேம்படுத்தப்பட்ட அணுகுமுறையானது, கனடா நாட்டிற்குள் பாதுகாப்பான மற்றும் நன்கு நியாயமான நுழைவுகளை உறுதி செய்வதோடு, வரவேற்கும் சர்வதேச பார்வையாளர்களை சமநிலைப்படுத்த கனடாவின் தற்போதைய முயற்சிகளை பிரதிபலிக்கிறது.