தற்போதைய சீரற்ற காலநிலையால் 16 பேர் மரணம்.

நாட்டில் சீரற்ற காலநிலையால் 16 பேர் உயிர்ழந்துள்ளனர். 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் 16 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.

98 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 333 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 596 பேர் இடைத்தங்கள் 245 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad