லிவ் இன் டுகெதர் ஆக தன்னுடன் வாழ்ந்த பெண்னை 40 துண்டுகளாக வெட்டி காட்டுக்குள் வீசிய கொடூரன்.

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தினை சேர்ந்த நரேஷ் பெங்ரா தமிழகத்தில் இறைச்சிக் கடையில் பணிபுரிந்தவர் ஆவார். இவர் தன்னுடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்த இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததுடன், கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் அவரை 40 துண்டுகளாக வெட்டி வன விலங்குகள் அதிகமுள்ள காட்டுப்பகுதியில் வீசியிருக்கிறார். ஏன் அப்படி செய்தார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்

கடந்த நவம்பர் 24 அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் ஜரியாகர் காவல்நிலையத்திற்கு உள்பட்ட ஜோர்டாக் கிராமத்தில், ஒரு தெரு நாய் மனித உடல் உறுப்புகளை வாயில் கவ்வியபடி ஓடியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக ஜரியாகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அது பெண்ணின் உடல் என்பதும். பல துண்டுகளாக உடல் வெட்டப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. அத்துடன் அந்த பெண் யார் என்பதும் தெரிய வந்தது. அவர் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுடன் பழகியது யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரும் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோர்டாக் கிராமத்தில் உள்ள நரேஷ் பெங்ரா (25 வயது) என்பது தெரியவந்தது. நரேஷ் பெங்ரா தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊரில் இறைச்சி கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுடன் நரேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளார்கள்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நரேஷ் தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டிற்கு திரும்பி உள்ளார். பின்னர் நரேஷ் தன்னுடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்த பெண்ணிடம் சொல்லாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்படி தமிழ்நாடு திரும்பியவரை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். தொடர் வற்புத்தல் காரணமாக, தன்னுடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்த பெண்ணை தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியா மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் நவம்பர் 8 ஆம் தேதி அன்று தனது காதலியை குந்தியா மாவட்டம் ஜரியாகர் அருகே ஜோர்டாக் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார் நரேஷ். அங்கு அந்த இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த நரேஷ், அதன்பின்னர் பெண்ணிண் துப்பட்டாவை எடுத்து அவரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

பின்னர் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டியதுடன் அதனை தனது வீட்டை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்கு எடுத்து சென்று வனவிலங்குகள் சாப்பிடும் வகையில் இறையாக வீசியுள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் தனது புது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார் நரேஷ்.ஆனால் சம்பவம் நடந்த 15 நாட்களுக்கு பிறகு, அதாவது நவம்பர் 24ம் தேதி நாய் மனித உறுப்பை வாயில் கவ்வி சென்றதை பார்த்து உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் நரேஷ் போலீசிடம் சிக்கியுள்ளார்.

இந்த தகவலை குந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமன் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் அசோக் சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் அசோக் சிங் கூறுகையில், அந்த நபர் தமிழகத்தில் இறைச்சிக் கடையில் பணிபுரிந்தவர் என்பதுடன், கோழியை வெட்டுவதில் வல்லவர் எனவே வர் வன விலங்குகளுக்கு விருந்து வைப்பதற்காக பெண்ணின் உடல் உறுப்புகளை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டியிருக்கிறார். அதனை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக உடல் உறுப்புகள் மீட்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்களுடன் ஒரு பையும் காட்டில் போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதன்பின்ர் பெண்ணின் தாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மகளின் உடைமைகளை அடையாளம் காட்டியதுடன், தனது மகள் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

அவர் தான் நரேஷ் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்ததால், நரேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad