கனடா ஒன்ராறியோவில் கடும் பனிப்பொழிவிற்கான சாத்தியம்.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மாகாணத்தின் குளங்கள் மிகவும் குறைந்த அளவு வெப்பநிலைக்கு செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் நீரின் வெப்பநிலை காரணமாக குளங்கள் பனி படலத்தினால் மூடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் சில தினங்களுக்கு மாகாணத்தில் இவ்வாறு கடுமையான பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சுமார் 80 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்கூறப்பட்டுள்ளது.

இடி மின்னல் தாக்கத்துடன் மணிக்கு 8 சென்டிமீட்டர் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு இருக்காது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad