புதையல் தோண்ட நீதிமன்றம் உத்தரவிடவில்லை. புதையல் தோண்டுவதற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

 மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அண்மித்த வெயங்கொட வடுரம்ப பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

குறித்த இடம் அகழ்வு தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் பூமிக்குள் உள்ள உலோகப் பொருட்களை மாத்திரம் ஆராயுமாறு உத்தரவிட்டதாக நீதியரசர் மஞ்சுள கருணாரத்ன திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த அகழ்வு தொடர்பான உண்மைகளை இன்று நீதிமன்றில் தெரிவித்த போதே நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவையின் ஊடகச் செயலாளர் திரு.நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த அகழ்வு நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad