14 வயது சிறுமியை கொலை செய்து கழிவறை குழிக்குள் வீசிய தாயின் இரண்டாம் கணவன்.

பதினான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கட்டப்பட்டு வரும் கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (5) இரவு பொலிசில் முறைப்பாடு அளித்த நிலையில், நடத்திய விசாரணையின் பின்னர், இந்தக் கொலைக்கான அடிப்படைக் காரணத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கொலையில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.இதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட தகவலின்படி முறைப்பாட்டாளரின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, சந்தேகநபர் சிறுமியை கொன்றுவிட்டு, நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் சடலத்தை வைத்து கான்கிரீட் பலகையால் மூடியிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கம்பஹா நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad