யாழ் யூரியூப்பர் கிருஸ்ணா சற்று முன் கைது.

யாழ் பண்டத்தரிப்பில் வைத்து யூரியூப்பர் கிருஸ்ணா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளான். உதவி வழங்குவது என்ற போர்வையில் சிறுமிகள் மற்றும் பெண்களை மிகக் கேவலமாக நடாத்திய குறித்த யூரியூப்பர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்புக்களுடன் கூடிய பதிவுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் கிருஸ்னா பொதுமக்களால் பிடிக்கபபட்டு இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியை சேர்ந்த யூரியுப்பர் கிருஸ்னா வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டிற்கு இரவு வேளை சென்ற குறித்த நபர் , பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே ,காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும் , தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிவந்தனர்.

இந்நிலையில் குறித்த வீட்டிற்கு இன்று சென்ற யூடியூப்பர் காணொளி எடுக்க முற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் யூடியூப்பரை நன்றாகக் கவனித்து பிடித்து இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad