மரவிலாவின் மெதகட்டுனேரி பகுதியைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பாதிக்படப்ட சிறுமி தெற்கு களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மேலும் இருவரும் 2023 ஆம் ஆண்டு தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான இளைஞன் 13 வயதான சிறுமியை கட்டுனேரிய பகுதிக்கு அடிக்கடி அழைத்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சிறுமிக்கு அடிக்கடி ஏற்படும் சுகயீனம் காரணமாக கட்டுனேரியா பகுதியில் உள்ள தேவாலயத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டுக்கு திரும்பாத சிறுமி, சந்தேக நபரான காதலனின் வீட்டில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரும் தானும் தங்கியிருந்த நாளிலிருந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தாயாரினால் முறைப்பாடு
காதலனுடன் சிகிச்சைக்காக சென்ற தனது பல வாரங்களாக வீடு திரும்பாத நிலையில் பொலிஸ் நிலையத்தில் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, சிறுமியுடன் இளைஞன் வாழ்ந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.