நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இன்று (09) யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.