சிவனேசதுரை சந்திரகாந்தன் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி தெரிவித்துள்ளது.

இதேநேரம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் இன்று மாலை பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad